மதுரையில் சாலையில் திரியும் மாடுகள்
சாலையில் திரியும் மாடுகள்
மதுரையில் ரோட்டில் மாடுகளை அலட்சியமாக திரியவிடும் கால்நடை உரிமையாளர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை நகர் மற்றும் புறநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கும்பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.
ஏனென்றால் அங்கும் இங்கும் ஆக சுற்றித் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. என்னதான் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் மிதித்தாலும் மீண்டும் அவைகளை சாலைகளில் திரிய விடுகின்றனர்.
இந்நிலையில் என்றும் மதுரை கீழமாசி வீதியில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும்பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கால்நடைகளால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே மாநகராட்சியில் இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story