சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் - விபத்து அபாயம்

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் - விபத்து  அபாயம்
சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்
மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில், பால் கறவை மாடுகள், இறைச்சி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகள், முன்பு வயல்வெளியில் மேய்த்து, தொழுவத்தில் பராமரிப்பர். தற்போது மேய்ப்பதோ, தொழுவத்தில் அடைப்பதோ இல்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மேய்கின்றன. சாலைகளில் திரண்டு, போக்குவரத்திற்கு இடையூறாக உலவுகின்றன. சாலையில் உலவும் கால்நடைகளின் மீது வாகனம் மோதி, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சுற்றுலா பயணியருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. காவல் நிலையம், திருக்கழுக்குன்றம் சாலை, ஐந்து ரதங்கள் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில், மாடுகள் கும்பலாக சுற்றுவதால் இடையூறு அதிகரித்துள்ளது. மாடுகள் சாலையில் உலவினால், உள்ளாட்சி நிர்வாகங்கள் பிடித்து, உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என, கலெக்டர் ராகுல்நாத் பலமுறை உத்தரவிட்டும், நிர்வாகங்கள் காற்றில் பறக்கவிட்டு, மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Tags

Next Story