சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு

பிடிக்கப்பட்ட மாடுகள் 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த  18 மாடுகள் மற்றும் 9 கன்றுக்குட்டிகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது. 
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றி திரிந்த 18 மாடுகள் மற்றும் 9 கன்றுக்குட்டிகள் மாநகராட்சி சார்பில் பிடிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சுற்றி தெரியும் கால்நடைகள் பிடிக்கப்படும் நிகழ்வானது தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. எனவே, கால்நடைகளை வளர்ப்போர் முறையாக அதற்கான கொட்டில் அமைத்து வளர்த்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் நிலையில் பிடிக்கப்படும் கால்நடைகள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story