பழைய கோட்டையில் ரூ 4 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
கன்றுடன் மயிலை பசு
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளை கள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும். வாங்குவதும் நடைபெறும்.
இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர். ஈரோடு, கரூர். நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர். நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் கலந்து காண்டனர். இதனை தொடர்ந்து மாட்டு சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கேயம் இன பெரிய பூச்சி காலைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள். மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள். மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் உள்ள 25 காங்கேயம் இன மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தை யில் அதிகபட்சமாக காங்கேயம் இன காரி கிடாரி கன்றுடன் மயிலை பசுமாடு ரூ.72 ஆயிரத்துக்கு விற்பனையானது. இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்படி மொத்தம் ரூ.4 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.மேலும் நேற்று நடைபெற்ற காங்கேயம் இன பசுமாடுகள் விற்பனை சந்தையில் திருப்பூர், ஈரோடு, திருச்சி. கரூர், கோவை. திண்டுக்கல், நாமக்கல் மாவட் டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.