பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ 12 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை !

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ 12 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை !

மாடுகள் விற்பனை

பழையகோட்டை மாட்டுத் தாவணையில் ரூ 12 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும் கம்பீரத்திற்கும் புகழ்பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர்,நாமக்கல், கோவை, திருச்ச, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கேயம் காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேய இன காளைகள் பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்த சந்தையில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மொத்தம் 56 காங்கேயம் இன பசுமாடுகள்,காளைகள் கன்றுகளில் மொத்தம் 34 நாட்டு பசு மாடுகள், காளைகள், கன்றுகள் ரூ.12 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story