இந்திய கம்யூ., தேசிய செயலாளர் ராஜா பிரசாரம்
டி.ராஜா
திருக்கோவிலுாரில் வரும் 9ம் தேதி நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், இந்திய கம்யூ., தேசிய செயலாளர் ராஜா பங்கேற்கிறார்.
இந்திய கம்யூ., விழுப்புரம் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் (தனி) தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும், வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, இந்திய கம்யூ., கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜா, வரும் 9ம் தேதி பிரசாரம் செய்கிறார். விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள இந்திய கம்யூ., மாவட்ட அலுவலகத்தில் காலை 11:00 மணிக்கு நிர்வாகிகள் சந்திப்பு நடக்கிறது. தொடர்ந்து, திருக்கோவிலுாரில் மாலை 4:00 மணிக்கு நடைபெறும், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராஜா பேசுகிறார். கம்யூ., மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story