சி.பி.ஐ.எம்.எல். சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சி.பி.ஐ.எம்.எல். சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

குமாரபாளையத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.ஐ.எம்.எல். சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சி.பி.ஐ.எம்.எல். சார்பில் ஆனங்கூர் பிரிவு பகுதியில், மாவட்ட செயலர் பொன்.கதிரவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜனநாயக உரிமைகளை பறிக்கும் புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்திட வேண்டும், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்திட வேண்டும், தேசிய ஊரக வேலை திட்ட ஒதுக்கீட்டை ஆண்டுக்கு 2.5 கோடியாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற தொழிலாளர்களுக்கு அதிக நாட்கள் வேலை வழங்க வேண்டும், வீடற்ற ஏழைகள் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் வகையில், பிரதமரின் கிராமப்புற, நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை விரிவு படுத்த வேண்டும், வீடு ஒன்றுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு 7 லட்சம ரூபாயாக உயர்த்த வேண்டும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயத்தால் ஏற்பட்ட மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்று டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி, மது விலக்கை கொண்டு வர வேண்டும், தமிழகம் முழுதும் பரவியுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலர் வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகன், கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story