தியாகி இரணியன் ஸ்தூபிக்கு சிபிஎம் தலைவர்கள் மரியாதை 

தியாகி இரணியன் ஸ்தூபிக்கு சிபிஎம் தலைவர்கள் மரியாதை 
X
நினைவு தூணுக்கு மரியாதை
மதுக்கூர் அருகே வாட்டாக்குடியில் இரணியன் நினைவு ஸ்தூபியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது

தஞ்சை தியாகி வாட்டாக்குடி இரணியன் நினைவு நாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமையன்று மதுக்கூர் ஒன்றியம், வாட்டாக்குடி வடக்கு ஊராட்சியில் அமைந்திருக்கும், தியாகி இரணியன் ஸ்தூபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செங்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மதுக்கூர் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தோழரும் மாவட்டக்குழு உறுப்பினருமான ஆர்.சி.பழனிவேலு,

மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.அய்யநாதன், ஜெ.ஹரிதாஸ்,

என்.பன்னீர்செல்வம், மூத்த தோழர் ஏ.எம்.வேதாச்சலம், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சந்துரு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், வாட்டாக்குடி வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் மெய்யநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து வாட்டாக்குடி தெற்கு, வாட்டாக்குடி இரணியன் நகர் கிளைகளில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

Tags

Next Story