மணப்பாறையில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மணப்பாறை பேருந்து நிலைய ரவுண்டாணாவில் இருந்து அக்கட்சியினர் கோரிக்கைகளை முழக்கமிட்டவாறு ஊர்வலமாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மணப்பாறை நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும் தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான இருக்கை, கழிப்பிடம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். அதேபோல் ஊராட்சி பகுதிகளில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

தேவையான பகுதிகளில் ஆழ்துளைக்கிணறு, மயான சாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நியாய விலை கட்டிடம் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும். 100 நாள் வேலையை முழுமையாக தருவதோடு சம்பள பாக்கி உடனடியாக வழங்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியே குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story