மத்திய அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் வெள்ள நிவாரண நிதியை வழங்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணாசிலை அருகில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நகர செயலாளர் முருகன் தலைமையில் மற்றும் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் முன்னிலையில்,கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதியில் புயல் மற்றும் வெள்ளத்தால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன்.அதற்கு முன்பு மிக் ஜாம் புயலால் மழை வெள்ளத்தில் சென்னை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படது.பாதிக்கப்பட்ட பகுதிகளை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும், மேலும் தமிழக அரசு சார்பில் தமிக மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக 21692 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது. ஆனால். ஒன்றிய அரசு அதற்கு செவி சாய்க்காமல் தமிழக அரசுக்கு மிக சொற்ப்பமான நிதியை மட்டுமே வழங்கி தமிழகத்தை புறக்கணித்துள்ளது என்றும், மேலும் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாகவும் எனவே தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story