நடைபாதை அமைத்து தரக்கோரி சிபிஎம்,பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நடைபாதை அமைத்து தரக்கோரி சிபிஎம்,பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சிபிஎம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோழகம்பட்டி கிளை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில், சோழகம்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில், நடைபாதை பணியை தடுக்கும் ரயில்வே துறையை கண்டித்தும், உடனடியாக நடைபாதை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பக்கிரி சாமி, என்.வி.கண்ணன் மாவட்டக் குழு உறுப்பினர்கள் வெ.ஜீவகுமார், கே.காந்தி, பி.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர்கள் பூதலூர் வடக்கு எம்.ரமேஷ், பூதலூர் தெற்கு சி.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மேனகா முத்துசாமி (சோழகம்பட்டி), சி.எம்.அசோக்குமார் (கடமங்குடி), சரண்யா மயில்சாமி (இந்தலூர்), முத்துசாமி (மாரனேரி) மற்றும் கடையக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எடிசன், இந்தலூர் ரமேஷ், பி.பாலசந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story