மத்திய அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மாவட்ட செயலாளர் ரமேஷ்
மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பிப்ரவரி 8ஆம் தேதி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் அறிக்கை .....
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஅலுவலகத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநரை வைத்து போட்டி அரசு நடுத்துவதையும், ஆளுநர்களைப் பயன்படுத்தி மசோதாக்கள், உழைக்கும் மக்கள் நல திட்டங்களுக்கும் அனுமதி தர மறுப்பது, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்ச நிதி பங்கீடு , புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்கட்சி தலைவர்களை மிரட்டுவது போன்ற, மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பிப் 8,ம் தேதி அன்று மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக. இதே கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 8ம் தேதி வியாழன் அன்று மாலை 4.00 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், அரசியல் ஆலோசனை குழு துரைராஜ், விசிக மேற்க்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன், விவசாய பிரிவு மாநில செயலாளர் வீர. செங்கோலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சர்புதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் அலி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராசு, திராவிட கழக மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் விஜேந்திரன், பெரியார் விடுதலை கழக மாவட்ட நிர்வாகி துரை.தாமோதரன், மக்கள் அதிகாரம் தலைவர் காவிரி நாடன், இந்திய தொழிலாளர் கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்கள். மாநில உரிமை காத்திட ! பெரம்பலூர் மாவட்ட மக்கள் வருகை தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.