பட்டாசு ஆலை விபத்து - மத்திய வெடி பொருள் கட்டுபாட்டுத்துறையினர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் 10 உயிரிழந்த பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த பெசோ அதிகாரிகள், வேதிப்பொருள் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) உரிமம் பெற்ற சுதர்சன் பட்டாசு சாலையில் கடந்த ஒன்பதாம் தேதி நடந்த பயங்கர வெடிவிபத்தில் 10 உயிரிழந்தனர்.
விதிமீறல் காரணமாக விபத்து நடந்ததாக தெரியவந்ததை அடுத்து பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த பெசோ அதிகாரிகள், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெசோ சார்பில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு பட்டாசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.இந்நிலையில் விபத்து நடந்த சுதர்சன் பட்டாசு ஆலையில் பெசோ சிவகாசி கிளையின் வெடிபொருள் ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஜனா தலைமையில் ஆய்வு செய்தனர்.விபத்தில் தரைமட்டமான கட்டிடங்கள், சிதறி கிடந்த பொருட்கள், பட்டாசு உற்பத்தி செய்ய பயன்படும் வேதிபொருட்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.