சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஆட்சியர் நேரில் ஆய்வு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து:  ஆட்சியர் நேரில் ஆய்வு
நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து நான்கு பேர் உயிர் இறந்த சம்பவம் வெடி விபத்து நடந்த இடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பகுதியில் இன்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் நான்கு நபர்கள் உயிரிழந்தனர் இந்நிலையில் இந்த விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அது தொடர்ந்து செய்தவர்களிடம் பேசுகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சூரக்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் வேதிப்பொருட்கள் கலவை அறையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டு நான்கு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த வெடி விபத்து பொறுத்தவரையில் நேற்று பணி முடிந்து மீதமுள்ள மருந்து கலவையை முறையாக அகற்றாமல் மீதம் வைத்ததன் காரணமாகவே அந்த வேதிப்பொருளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாகவே இந்த வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும்,

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பட்டாசு ஆலைகள் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள் வாடகைக்கு விடப்படுகின்றனவா என கடந்த மூன்று மாதங்களாக ஆய்வு செய்யப்பட்டு உள்வாடகை மற்றும் அதிகளவு உற்பத்தி செய்த பட்டாசு ஆலைகள் என 70 ஆலைகள் கடந்த மூன்று மாதங்களில் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் விபத்து ஏற்பட்ட இந்த ஆலை உள்வாடகைக்கு விடவில்லை எனவும்,

முதற்கட்ட விசாரணையில் கலவை கலக்கும் அறையில் நேற்று கலவை கலந்ததில் மீதமிருந்ததன் காரணமாகவே இந்த வெடிப்பு பற்றி ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்

Tags

Next Story