பட்டாசு ஆலை வெடி விபத்து - காவல்துறை வழக்கு பதிவு

பட்டாசு ஆலை வெடி விபத்து -  காவல்துறை வழக்கு பதிவு

பட்டாசு ஆலை வெடி விபத்து - காவல்துறை வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து காவல்துறை வழக்கு பதிவு
விருதுநகர் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சங்கரபாண்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெடி சத்தம் கேட்டதாகவும் இதை அடுத்து தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வில் ஈடுபட்டதாகவும் அப்பொழுது ஓ சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த சிவலிங்கம் என்பவரின் மனைவி சுபலட்சுமி என்பவர் பெயரில் அங்கு இருந்த பட்டா நிலத்தில் சங்கர் கணேஷ் என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருவதாகவும் அந்த ஆலையில் இருந்து வெளிச்சத்தம் கேட்டது உறுதி செய்யப்பட்டு அங்கு சென்று பார்த்த பொழுது வெடிபொருட்கள் மற்றும் மணிமருந்து இருந்த அறை வெடித்து தரமாட்டமானது தெரியவந்தது. இதை அடுத்து அவர் உடனடியாக ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இது குறித்து விசாரணை நடத்தியதில் விசாரணையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலை விடுமுறை விடப்பட்டதாகவும் ஆலை சுற்றி உள்ள புற்களை அகற்றும் தூய்மை பணியில் நடைபெற்றதாகவும் அதன் காரணமாக இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆலையின் உரிமையாளர் சுந்தர் லட்சுமி மற்றும் ஆலையின் போர் மேன் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story