பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு ரூ 10 லட்சம் கேட்டு தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க கோரி சிவகாசி அரசு மருத்துவமனை முன்பு தமிழர் தேசம் கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்த கும்பத்தினருக்கு ரூ10 லட்சம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் ஏற்கனவே 6 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,மீதி 4 பேர் உடல்களை வாங்காமல் தற்போது தமிழர் தேசிய கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மறியலில் ஈடுபட்டவரிடம் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story