சிவகாசியில் கடன் பிரச்சனையில் பட்டாசு தொழிலாளி தற்கொலை

சிவகாசியில் கடன் பிரச்சனையில் பட்டாசு தொழிலாளி தற்கொலை
சிவகாசியில் கடன் பிரச்சனையில் பட்டாசு தொழிலாளி தற்கொலை
சிவகாசி அருகே கடன் பிரச்சனையில் பட்டாசு தொழிலாளி தற்கொலை செய்து உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பேராபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோபாஸ்கர்.இவரது மகன் சரவணன் (47). இவர் மீனம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு வந்தவர், ஆலையில் மத்தாப்பூகுச்சி தயாரிக்க பயன்படுத்தப்படும் பைக்ரோமேட் என்ற மூலப்பொருளை குடித்துள்ளார். மயக்கம்அடைந்த அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ====

Tags

Next Story