பட்டாசு வணிகர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
செயற்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் 15வது மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் 15வது மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அனந்த பத்மநாபன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குமரேசன், செயலாளர் சண்டிகேஸ்வரி ஆனந்த் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சீனுவாசன் வரவேற்றார். லைசன்ஸ் பெற்ற 60க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமங்களை 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்க வேண்டும். விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் உரிமங்கள் புதுப்பித்து வழங்க வேண்டும். பட்டாசு கடைகளுக்கு வெடிபொருள் சட்டத்தை மீறிய நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும். சட்ட விரோத பட்டாசு விற்பனையை தடுக்க வேண்டும். ஒற்றை சாளர முறையில் பட்டாசு கடை உரிமங்கள் புதுப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story