மின்வாரிய அலுவலக கட்டடத்தில் விரிசல்
திருப்போரூர்துணை மின் நிலைய கட்டடத்தில், உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்படுகின்றன. இதில், பொறியாளர் அறை, மின் கட்டணம் மையம், அலுவலக அறைகள் உள்ளன. திருப்போரூர், தண்டலம், காலவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 18,000 மின் இணைப்புகள், இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இக்கட்டடம் கட்டப்பட்டதால், பழுது அடைந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. இக்கட்டடத்தின் உட்புற கூரை ஆங்காங்கே பெயர்ந்து, பணி நேரத்தில் ஊழியர்கள் மீது விழுந்து, ஆபத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், மழை நேரத்தில் கம்ப்யூட்டர், பிரின்டர், முக்கிய ஆவணங்கள் நனைந்து பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இதனால், அடிக்கடி கம்ப்யூட்டர் பழுதடைந்து பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆவணங்களை பாதுகாக்க முடியாமலும், போதிய இடவசதி இல்லாமலும் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, விரிசல் ஏற்பட்ட மின் வாரிய அலுவலக கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது."