ரயில் தண்டவாளத்தில் விரிசல்
ரயில் தண்டவாளத்தில் விரிசல்
ரயில் தண்டவாளத்தில் விரிசல்.திருசெந்தூர் நோக்கி விரைந்து சென்ற ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கேரள மாநில பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அந்த ரயில் அதனை தொடர்ந்து திண்டுக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரம் என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக அந்த ரயிலை பாதியில் நிறுத்தினார். ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
Next Story