சாகசங்கள் செய்து அசத்திய சர்க்கஸ் கலைஞர்கள்

சர்க்கஸ்
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் அப்போலா சர்க்கஸ் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண், பெண் கலைஞர்கள் தங்களது சாகச நிகழ்ச்சிகளை சர்க்கஸில் அரங்கேற்றம் செய்து சேலம், நாமக்கல் மாவட்ட மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.
வழக்கமான சர்க்கஸ் சாகச காட்சிகளை விட அப்போலா சர்க்கஸில் இதுவரை கண்டிராத பல்வேறு நிகழ்வுகளை கலைஞர்கள் நம் மனக்கண் முன் நிகழ்த்தி காட்டுகின்றனர். அந்தரத்தில் பார் கம்பிகளில் பெண் கலைஞர்கள் நிகழ்த்தும் சாகச காட்சிகளும், ஒருவர் மீது இன்னொருவர் ஏறி நின்று பிரமிடு போன்ற காட்சிகளும், வெளிநாட்டு கலைஞர்களின் நகைச்சுவை காட்சிகளும், கோமாளியின் நகைச்சுவை காட்சிகளும் குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளது.
அரங்கத்துக்குள் இருந்து சர்க்கஸ் முடியும் வரை நல்லதொரு பொழுதுபோக்கு நிகழ்வு மட்டும் அல்லாமல் கலைஞர்களின் சாகசங்களும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றன. இந்த காட்சிகள் தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகளாக நடக்கின்றன. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவன மாணவ- மாணவிகளுக்கு சர்க்கஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. அவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை சர்க்கஸ் உரிமையாளர் சனல் ஜார்ஜ், ஈரோடு பாபு ஆகியோர் செய்துள்ளனர்.
