குப்பை தரம் பிரிக்க விழிப்புணர்வு

குப்பை தரம் பிரிக்க விழிப்புணர்வு
துண்டு பிரச்சாரம்
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு போன்றவை குறித்து பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில், துாய்மை பாரத இயக்கத்தின்கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் இல்லா கிராமமாக திருப்புலிவனத்தை மாற்ற, ஊராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடுதோறும் சேகரிக்கும் குப்பையை தரம் பிரிக்கும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்புலிவனம் ஊராட்சியில் அவரவர் வீடுகளில் வெளியேறும் குப்பையில், எண்ணெய் கவர், பால் பாக்கெட் கவர், மசாலா கவர், பிஸ்கட் கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் குப்பையை தரம் பிரித்து கொடுத்தால் ஊராட்சி சார்பில் கிலோவிற்கு 10 ரூபாய் வீதம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் குப்பையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு போன்றவை குறித்து பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story