கிரிக்கெட் போட்டி: ஏ.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி அணி சாம்பியன்

கிரிக்கெட் போட்டி: ஏ.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி அணி சாம்பியன்

தென்மண்டல பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் ஏ.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி அணி சாம்பியன் வென்றது.

தென்மண்டல பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் ஏ.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி அணி சாம்பியன் வென்றது.

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் கிரிக்கெட் போட்டி இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் சேலம் ஏ.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி அணி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று தென்னிந்தியாவின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் எம்.பி.ஏ.வை சேர்ந்த சுஜித் சிறந்த வீரர், சிறந்த பந்து வீச்சாளர், தொடர் ஆட்டநாயகன் ஆகிய விருதுகளை வென்றார். ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் கவுரிசங்கர், கணேஷ், சுஜித் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இந்த வெற்றி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏ.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த போட்டியை அண்ணா பல்கலைக்கழக அணித்தலைவர் கவுரிசங்கர் அணியை சிறப்பாக வழி நடத்தினார். இவர்களை கல்லூரி நிர்வாகிகள் பாராட்டினர்.

Tags

Next Story