பேராவூரணி அருகே கிரிக்கெட் போட்டி ரூ.1 லட்சம் பரிசு ... 

பேராவூரணி அருகே கிரிக்கெட் போட்டி ரூ.1 லட்சம் பரிசு.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருபாலக்காடு - கிழக்கு கிராமத்தில் ஈகிள் ஸ்டார் நற்பணி விளையாட்டு குழுமம், கிராம மக்கள் சார்பில், அய்யனார் கோயில் திடலில், 10 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவகர் பாபு, மருத்துவர் எஸ்.ஆர். சந்திரசேகரன், தென்னங்குடி ராஜா, பேராவூரணி ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், அதிமுக பேராவூரணி நகர செயலாளர் எம்.எஸ். நீலகண்டன், பேராவூரணி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், கரம்பக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.குகன் சேதுபாவாசத்திரம் செல்வக்கிளி, அதிமுக கிளைச் செயலாளர் அறிவழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீரப்பன் மற்றும் ஈகிள் ஸ்டார் குரூப் நண்பர்கள், செருபாலக்காடு கிழக்கு கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், முதல் பரிசு ரூபாய் 30 ஆயிரம் தில்லங்காடு அணிக்கும், இரண்டாம் பரிசு ரூபாய் 25 ஆயிரம் செருபாலக்காடு ஈகிள் ஸ்டார் அணிக்கும், மூன்றாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் செருபாலக்காடு எஸ்.டி.சி.சி அணிக்கும், நான்காம் பரிசு ரூபாய் 15 ஆயிரம் புதுப்பட்டினம் அணிக்கும், ஐந்தாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் நாடாகாடு அணிக்கும் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story