கிரிக்கெட் போட்டி-200 அணிகள் பங்கேற்பு

கிரிக்கெட் போட்டி-200 அணிகள் பங்கேற்பு

திருப்போரூரில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் 200 அணிகள் பங்கேற்கின்றன.


திருப்போரூரில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் 200 அணிகள் பங்கேற்கின்றன.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கோவளம் கடற்கரையில், கோவளம் பெஸ்ட் என்ற தலைப்பில் எஸ்.டி.எஸ்., பவுண்டேஷன் சார்பில், கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் எஸ் டி எஸ் பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனர் சுந்தர் ஏற்பாட்டில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள 200 அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஒரு அணிக்கு 5 ஓவர் நிர்ணயம் செய்யப்பட்டு தொடர்ந்து 20 நாட்கள் வரை போட்டி நடைபெறுகிறது முதலாவதாக போட்டியை எஸ் டி எஸ் பவுண்டேஷன் நிறுவனர் சுந்தர் முன்னிலையில் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா சுந்தர் டாஸ் போட்டு துவக்கி வைத்ததுடன் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு நிறுவனர் சுந்தர் மற்றும் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா சுந்தர் ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இறுதி போட்டியில் வெல்லும் அணிக்கு, முதல் பரிசு 2 லட்சம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை, மூன்றாம் பரிசு 75 ஆயிரம் மற்றும் கோப்பை, நான்காம் பரிசு 50 ஆயிரம் மற்றும் கோப்பை, ஐந்தாம் பரிசு 40 ஆயிரம் மற்றும் கோப்பை, ஆறாம் பரிசு 30 ஆயிரம் மற்றும் கோப்பை, ஏழாம் பரிசு 20 ஆயிரம் மற்றும் கோப்பை, எட்டாம் பரிசு 10 ஆயிரம் மற்றும் கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது முதல் போட்டியில், மாமல்லபுரம் எல்.எல்.எப்., அணி மற்றும் ஆமூர் என்.எப்.எஸ்.சி., கிரிக்கெட் அணி மோதியதில் மாமல்லபுரம் எல்.எல்.எப்., அணி வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் முட்டுகாடு ஸ்டைர்க்கெர்ஸ் கிரிக்கெட் அணி மற்றும் திருக்கழுக்குன்றம் ஸ்டார் அணி மோதியதில் புது கல்பாக்கம் கோல்டன் ஸ்டார் அணி வெற்றிபெற்றது. மூன்றாவது போட்டியில் ஆனூர் பிரன்ட்ஸ் கிரிக்கெட் அணி மற்றும் தேவனேரி குப்பம் டி.வி.கே., டைட்டன்ஸ் அணி மோதியதில் ஆனூர் பிரன்ட்ஸ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் சட்ராஸ் குப்பம் சீ வோர்ஸ் அணி மற்றும் கேளம்பாக்கம் கே.எப்.சி., பி அணி மோதியதில் கேளம்பாக்கம் கே.எப்.சி., பி அணி வெற்றிபெற்றது தொடர்ந்து இதுவரையில் 92 அணிகள் விளையாடி உள்ளன, ஆட்ட முடிவில் ஆட்ட நாயகன் விருதை 30 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் டீ சர்ட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை எஸ் டி எஸ் பவுண்டேஷன் சார்பில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story