குழந்தைகளுக்கு எதிரான் குற்றங்களை தடுக்க வேண்டும் - ஆட்சியர்
ஆய்வு கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை தடுக்க விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தினார்.
இராணிப்பேட்டையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல் வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு கூட்டம் ஆட்சியர் வளர்மதி தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் : குழந்தை திருமணங்களை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். எனவே அதுகுறித்த புகார் வந்ததும் போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்களிடையே குழந்தை திருமணம் , போக்சோ சட்டம், குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார் கூட்டத்தில் எஸ்.பி. கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரே ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)விஜயராகவன், உதவி ஆணையர் (கலால்)வரதராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசுயா, வட்டாட்சியர் (குற்றவியல்) ஜெயக்குமார். மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story