வழிப்பறி குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி கைது

வழிப்பறி குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி கைது

குற்றவாளி 

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த 6 வழிப்பறி குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து 28 சவரன் நகைகளையும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த வழிப்பறி வழக்குளை விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டறிய பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படியும் பெரம்பலூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் தலைமைக் காவலர்கள் அலேக்சாண்டர், முனீஸ்ராஜா மற்றும் முதல்நிலைக் காவலர் கிருஷ்ணக்குமார், கார்த்திக் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை செய்தும், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் மேற்படி குற்ற வழக்குகளில் ஈடுபட்டது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தென்பரை, காமண்டி தெரு மோகன்தாஸ் மகன் சூரியவர்மா வயது -32 என்பதும் இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் குற்ற வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்ததும் விசாரணையில் கண்ணடுபிடிக்கப்பட்டது.

மேலும் குற்றவாளியை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை செய்த தனிப்படையினர், பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வழிப்பறி மற்றும் திருச்சி மாவட்டத்தில் ஒரு வழிப்பறி என மொத்தம் 7 வழக்குகளில் தொடர்புடைய 28 சவரன் நகை .2 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து குற்றவாளியை மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு மே 17ஆம் தேதி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story