பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு - பூக்கள் விலை உயர்வு
பூ மார்க்கெட்
சேலம் மாவட்டத்தில் கன்னங்குறிச்சி, மல்லூர், ஓமலூர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் தினமும் பறித்து சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக இரவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டிற்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.1,200-க்கு விற்கப்பட்டது. இதேபோல், சாதிமல்லி, சன்னமல்லி, சம்பங்கி பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ முல்லை ரூ.800-ம், சாதிமல்லி ரூ.400-ம், அரளிப்பூ ரூ.180-ம், காக்கட்டான் ரூ.360-ம், செவ்வரளி ரூ.220-ம் விற்பனை செய்யப்பட்டது.
Next Story