காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்து அடித்ததால் பயிர் சேதம்!

குற்றச் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை தனியார் விதை உரம் பூச்சிக்கொல்லி மருந்து கடையில் காலாவதியான பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனையால் 7 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல்மணிகள் சேதம் விவசாயி வேதனை.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டையில் வசித்து வருபவர் விவசாயி சூசைமாணிக்கம் இவர் பரம்பரை பரம்பரையாக நெல் கடலை உளுந்து சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் தனது வயலில் 7 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நடவு சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் மருந்து அடிக்கலாம் என்று தனியார் கடை உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கிள்ளுக்கோட்டையில் உள்ள குறிஞ்சி என்ற தனியார் மருந்து கடையில் மருந்து வாங்கி விவசாயி சூசைமாணிக்கம் தான் உற்பத்தி செய்த ஏழு ஏக்கர் நெற்பயிருக்கு மருந்து அடித்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து கடந்த ஒரு வார காலமாகவே நெல் மணிகள் அனைத்தும் நெற்பயிரை விட்டு வயலில் கொட்டப்பட்டதை கண்டு அதிருப்தி அடைந்தார். பின்னர் இது குறித்து கடை தனியார் கடை உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார் தகவல் அறிந்த கடை தனியார் கடை உரிமையாளர் இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இருப்பினும் விவசாயி சூசைமாணிக்கம் மகன் இருதயராஜ் நெல் மணிகள் தொடந்து சேதமடைந்து வருவதை அறிந்த உள்ளார். இருப்பினும் தனது தந்தை கூற அதிகாரிகளிடம் கூற அச்சப்படுகிறார் என்றும் இருதயராஜ் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக கூறியுள்ளார். இதனை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் வேளாண்மை துறை அதிகாரிகள் கில்ளுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள விவசாயி சூசைமாணிக்கத்திற்கு சொந்தமான விவசாய நிலத்தை ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது தவறான மருந்து அடித்ததாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் விவசாயி அடித்த மருந்து பாட்டில் தேதியை பார்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்கள் இதனை அடுத்து விவசாயி அடித்த மருந்து டப்பாவை அதிகாரிகளிடம் எடுத்துக் காட்டினார் அப்பொழுது மருந்து காலாவதி ஆனது தெரியவந்தது மேலும் விவசாய பயிர் அழிந்ததற்கு காரணம் நீங்கள் செலுத்திய மருந்து தான் எனவும் இந்த மருந்து எங்கு வாங்கினீர்கள் என்றும் அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்கு கிள்ளூக்கோட்டை பகுதியில் உள்ள குறிஞ்சி மருந்து விநியோக கடையில் மருந்து வாங்கி ட்ரோன் மூலம் அடித்ததாகவும் விவசாயி கூறியுள்ளார் இது குறித்து விவசாயி கூறுகையில் ஒரு ஏக்கருக்கு 30,000க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் தனக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Tags

Next Story