பயிர் காப்பீட்டு சர்வர் கோளாறு - விவசாயிகள் அவதி

பயிர் காப்பீட்டு சர்வர்  கோளாறு - விவசாயிகள் அவதி

பைல் படம் 

பொது இ-சேவை மையத்தில் பயிர் காப்பீட்டு சர்வர் வேலை செய்யாததால் கடந்த 7 நாட்களாக காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

.நாகை மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு பின் நெல் தரிசில் கோடை பயிராக 70 நாள் வயதுடைய உளுந்து, பச்சை பயிறு வகை பயிர்கள் நெ ல் அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்போ அல்லது நெல் அறுவடைக்கு பின்னர் வயலில் ஈரப்பதம் மெழுகு பதம் என்று சொல்லக்கூடிய சேற்றில் விதைப்பு செய்யப்படுகிறது. நிலம் காய்ந்தாலும் செழித்து வளரக்கூடிய விதை மற்றும் விதைப்பு செலவு என குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய பணப்பறுரா க உளுந்து, மற்றும் பச்சை பயிறு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிர்கள் அதிக மழை மற்றும் கடுமையான பூச்சி, நோய் தாக்குதலால் பாதிப்பு ஏற்படும். இதற்காக உளுந்து மற்றும் பயறு வகை செடிகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்த பயிர்களுக்கு காப்பீடு செய்ய இன்று பிப் 15ம் தேதி கடைசி நாளாகும். இந்த உளுந்து பச்சை பயிருக்கு பயிர் காப்பீடுகள் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மற்றும் அரசால் அங்கிகரிக்கப்பட்ட பொது சேவை மையம் (ஈ சேவை மையம்) மூலம் விவசாயிகள் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஈ சேவை மையத்தில் கடந்த 7ம் தேதி முதல் பி.எம்.எப்.பீ. ஒய் தளத்தில் ஆதார் சரிபார்ப்பு கோளாறு நிலவி வருகிறது. இதனால் கடந்த 7. நாட்களாக உளுந்து பச்சை பயிருக்கு பயிர் காப்பீடுகள் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இன்று கடைசி நாள் என்ற நிலையில் உளுந்து பச்சை பயறு பயிர்கள் சாகுபடி செய்த சுமார் 70 சதவீதம் நிலப்பரப்பிற்கு காப்பீடு செய்ய முடியாத நிலை உள்ளது. உடன் அரசு காப்பீடு செய்யும் நாளை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் இந்நிலையில் நேற்று பிட்14 தேதி மாலை 3.30 மணி முதல் காப்பீடு செய்வதற்கான சார்வர் வேலை செய்ய தொடங்கியுள்ள நிலையில் 7 நாட்கள் காப்பீடு செய்ய விவசாயிகள் ஒரே நாளில் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

Tags

Next Story