மழையால் பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

மழையால் பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

 தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 8,420 ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இடைவெளி விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் பெய்த பலத்த மழையால் பால்பிடிக்கும் தருணத்திலும், அறுவடைக்குத் தயாராகியும் வந்த சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஏறத்தாழ 6 - ஆயிரம் ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும், தண்ணீர் வடிந்த பிறகு பாதிப்பு விவரம் தெரியவரும் எனவும் வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பெய்த மழையால் வயலில் தண்ணீர் தேங்கி, வடிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இது குறித்து விவசாயிகள் சங்கம் ஆலயமணி தெரிவித்தது: திருவிடைமருதூர் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் செய்யப் பட்டுள்ள சம்பா சாகுபடி நெற் பயிர்கள் சில நாள்களில் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் இருந்தது. கடந்த 4 நாள்களாக விட்டுவிட்டு பெய்த தொடர்மழையால் நெற்பயிர்கள் அனைத்தும், மழைநீரால் சூழப்பட்டும், சாய்ந்தும் வயலிலேயே கிடக்கின்றன. ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து விவசாயிகள் மீள, பாதிப்பை முழுமையாகக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.

இதேபோல, தஞ்சாவூர் வட்டாரத்தில் இரு நாள்களாக பெய்த பலத்த மழையால் மடிகை, சூரக்கோட்டை உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் பயிரிடப்பட்ட நிலக்க டலை, உளுந்து, எள் போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வளரும் பருவத்தில் இருந்த இப்பயிர்கள் பயிரிடப் பட்டவயல்களில் மழை நீர் தேங்கி யுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து, எள் ஆகிய பயிர்களும் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

Tags

Next Story