ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அலைமோதும் மக்கள் கூட்டம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அலைமோதும் மக்கள் கூட்டம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குறிப்பாக சினி ஃபால்ஸ், முதலைப் பண்ணை, ஐந்தருவி, பரிசல் துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story