செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அலைமோதிய கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமில் கூட்டம் அலைமோதியது
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அருண் ராஜ் பொறுப்பேற்று முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகம் நடைபெற்றது..இதில் இன்று முதல் பொதுமக்களின் மனுக்களை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படுகிறது.
அதற்கான ரசீது வழங்கப்படுகிறது.. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் இரண்டு மணி வரை மக்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காண முடிந்தது.. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் முகப்பில் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினர்..
Next Story