தொழில் முனைவோர்களுக்கான பெருந்திரள் கூட்டம்

தொழில் முனைவோர்களுக்கான பெருந்திரள் கூட்டம்

தொழில் முனைவோருக்கான கூட்டத்தில் ஒற்றை சாளர முறையில் உள்ள குறைபாடுகள் களைய நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பேச்சு.

தொழில் முனைவோருக்கான கூட்டத்தில் ஒற்றை சாளர முறையில் உள்ள குறைபாடுகள் களைய நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பேச்சு.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னையில் நடைபெறுவதையொட்டி, வேலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கான பெருந்திரள் கூட்டம் காட்பாடியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பேசுகையில் , ஒற்றை சாளர முறையில் எனப்படும் சிங்கிள் விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள குறைகளை கூறியுள்ளனர் . அவைகள் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடத்தில் பேசி தொழில் முனைவோருக்கான ஒற்றை சாளர முறையில் உள்ள குறைபாடுகள் களைய நடவடிக்கை எடுக்கபடும் என பேசினார் . வேலூர் மாவட்டத்திற்கு ரூ.819 கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில், இந்த அரசு செய்துள்ள உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில் முனைவோருக்கு தருகின்ற ஆதரவு, சலுகைகள், மானியங்கள் இவற்றை எல்லாம் பார்த்து, 819 கோடி இலக்கை தாண்டி 74 தொழில் நிறுவனங்கள் நமது மாவட்டத்தில் 860 கோடியே 50 இலட்சம் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது . இவ்விழாவில் மாநகராட்சி துணை மேயர் சுனில் ,காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ரமணி உள்ளிட்டோர் திரளானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story