விஷேச நாட்களில் பேருந்தில் அலைமோதும் கூட்டம் - பயணிகள் அவதி

சுபமுகூர்த்த நாளையொட்டி பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் கூட்ட நெரிசலில் சிக்கியபடியே பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியிலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே வெகு நேரமாக காத்திருந்து பேருந்துகளில் ஏறி சென்றனர். இதனால் விஷேச நாளான நேற்று பேருந்து நிலையம் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஜூன் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாளான நேற்று முன்தினம் அனைத்து பகுதிகளிலும் திருமணம், கோவில் கும்பாபிஷேகம் , கடை திறப்பு விழா, புதுமனை புகும் விழாஎன அனைத்து சுபகாரியங்களும் நடைபெற்றன. எனவே இந்த விஷேகங்களுக்கு செல்ல காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டார வாழ் பொதுமக்கள் பேருந்துகளில் செல்வதற்கு பேருந்து நிலையம் வந்திருந்தனர். அப்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் கூட வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் பேருந்துகள் கூட்ட நெரிசலாகவும், சீட்டு கிடைக்காமலும் பயணிகள் அலைமோதினர். மேலும் பெண் மற்றும் குழந்தைகள் வெகு நேரம் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பேருந்துகளில் ஏறி பயணம் செய்தனர். இதனால் நேற்று முழுவதும் காங்கேயம் பேருந்து நிலையம் விழா கோலமாக காட்சியளித்தது.

Tags

Read MoreRead Less
Next Story