பெண் யானை உயிருக்கு போராட்டம் - சுற்றி சுற்றி வரும் குட்டியானையின் பாசப்போராட்டம்

பெண் யானை உயிருக்கு போராட்டம் - சுற்றி சுற்றி வரும் குட்டியானையின் பாசப்போராட்டம்

குட்டியானையின் பாசப்போராட்டம் 

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அருகே வயது மூப்பு காரணமாக பெண் யானை உயிருக்கு போராடி வரும் நிலையில் சுற்றி சுற்றி வரும் குட்டியானையின் பாசப்போராட்டம்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம் பண்ணாரி கோவில் அருகே நேற்று இரவு வந்த குட்டியுடன் வந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது. தாய் யானையை சுற்றி சுற்றி குட்டியானை அங்கேயே சப்தமிட்டு வந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்ட குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்துறையினர் அளித்து வருகின்றனர். இருந்தாலும் தாய் யானை எழ முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதனுடைய குட்டிக்கு இரண்டு மாதமே ஆனதால், அங்கேயே சுற்றித் திரிந்தது. பண்ணாரி - பவானிசாகர் சாலையின் அருகிலேயே யானை படுத்திருப்பதால், குட்டி யானை சாலைக்கு சென்று அடிபட்டு விட்டால் என்று என்ன செய்வது என்று, ஒரு ஐந்து அடி ஆழத்தில் குழியை தோண்டி, அந்த குட்டியை அதன் அந்த குழிக்குள் வைத்து அதற்கு பால் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர் ஆகிவற்றை வனத்துறையினர் வழங்கி வருகிறார்கள். தாயை விட்டு பிரிய முடியாமல் இருக்கும் இரண்டு மாத குட்டி யானையின் பாச போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரண்டு யானைகள் இந்த யானையை சுற்றி சத்தமிட்டு வருவதால் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானைகளை துரத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story