வெள்ளரிக்காய் விலை கிடுகிடு சரிவு
கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக வெள்ளரிக்காய் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் ஆண்டு தோறும் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்து வெள்ளரிக்காய் அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலேகுந்தாணி கிராமத்தில் சேகர் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சுமார் ஐந்து ஏக்கர் நிலவரத்தில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து வந்தார்.
இந்த நிலையில் இரண்டு மாதங்களாக அறுவடை செய்து சென்னை பெங்களூர் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவந்த நிலையில் ஒரு மூட்டை வெள்ளரிக்காய் 2500 முதல் 3000 ரூபாய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக வெள்ளரிக்காய் விலை சரிந்து தற்போது ஒரு மூட்டை 500 ரூபாய் முதல் 1000 வரை மட்டுமே விற்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து கவலை அடைந்துள்ளனர்.