கடலூர்: மீட்கப்பட்ட சிறுவனின் சடலம்
கடலூர், வேகாக்கொல்லையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கிணறில், தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
கடலூர், வேகாக்கொல்லையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கிணறில், தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூா் அருகேயுள்ள வேகாக்கொல்லை கிராமத்தில் கேக் வெட்டி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாணவா்கள் ஈடுபட்டனா். அப்போது சாலையில் வந்த வாகனத்தைப் பாா்த்து காவல் துறையினர் வருவதாக எண்ணி அங்கிருந்து ஓடினா். இதில் அருள் மகன் ஆரியா, முருகன் மகன் தமிழ்செல்வன் ஆகியோா் அந்தப் பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தனா். தமிழ்செல்வனின் கூச்சலிட்டதையடுத்து, அங்கு வந்த கிராம மக்கள் அவரை மீட்டனா். தொடா்ந்து, ஆா்யாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இது குறித்து காடாம்புலியூா் காவல் நிலையம், முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் தொ. கிருஷ்ணமுா்த்தி தலைமையிலான தீயணைப்புப் படையினா் வந்து இரண்டு மோட்டாா்களை பயன்படுத்தி கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றினா். சுமாா் 3 மணி நேரத்துக்குப் பிறகு ஆரியாவின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து காடாம்புலியூா் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story