கோண்டூர் பகுதியில் கடலூர் எம்எல்ஏ ஆய்வு
கோண்டூர் பகுதியில் கடலூர் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
கோண்டூர் பகுதியில் கடலூர் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சி சாலைகள் மழைக் காரணமாகச் சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் அச்சாலைகளை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்து விரைவில் புதிய சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குப் பரிந்துரைத்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags
Next Story