சேலம் ;நாச்சியப்பா கூட்டுறவு நிலையத்தில் சமையல் கலை கைவினைஞர் பயிற்சி
நாச்சியப்பா கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம்
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு தொழில் பயிற்சி நிலையத்தில் சமையல் கலை கைவினைஞர் பயிற்சியில் மாணவ- மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.
தேசிய தொழிற்சார் பயிற்சி கழகம், புதுடெல்லி நிறுவன அங்கீகாரம் பெற்ற ஓராண்டு சமையல் கலை, உணவு தயாரித்தல் பயிற்சியை கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு நட்சத்திர ஓட்டல், கப்பல் நிறுவனங்கள், ரெயில்வே துறை சமையலர், விமான துறை சமையலர், மத்திய, மாநில அரசு விடுதி சமையலர், உணவு உற்பத்தி துறை, மருத்துவமனை சமையலர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை போன்ற நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை நாச்சியப்பா கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
Tags
Next Story