கொத்தமல்லி, சுண்டல் சாகுபடி துவக்கம்
கொத்தமல்லி, சுண்டல் சாகுபடி துவக்கம்
கொத்தமல்லி, சுண்டல் சாகுபடி துவக்கம்
கன்னிவாடி, பருவமழை, புயல் மழை என எதுவும் கைகொடுக்காத நிலையில் தருமத்துப்பட்டி, கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.மழையை நம்பி, காரமடை, கசவனம்பட்டி, கோனுார், வண்ணம்பட்டி, வீரக்கல், எஸ்.பாறைப்பட்டி, சுரக்காபட்டி உள்ளிட்ட கிராமங்களில், ஏராளமானோர் சோளம், மக்காச்சோளம், பயிறு வகை சாகுபடியில் ஈடுபட்டனர். படைப்புழு, அதிக வெயில், எடை குறைவு, விலை கிடைக்காத நிலை போன்ற பிரச்சனை 5 ஆண்டுகளாக தொடர்கிறது. சில நாட்களாக, இரவு நேர பனிப்பொழிவு துவங்கியது. கரிசல்பட்டி, சின்னப்பபுரம், கந்தசாமிபுரம், வட்டப்பாறை, மேட்டுப்பட்டி, கூத்தம்பட்டி பகுதிகளில், கொத்தமல்லி, சுண்டல் சாகுபடியை துவக்கினர்.
Tags
Next Story