கோடை பருவத்திற்கு ஏற்ற உளுந்து, எள், நிலக்கடலை சாகுபடி

கோடை பருவத்தில் உளுந்து, எள், நிலக்கடலை சாகுபடி செய்யலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: கோடை பருவத்தில் உளுந்து, எள், நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் நிலங்களில் பூச்சி மற்றும் பூஞ்சை காளான் அழிக்கப்பட்டு தீமை செய்யும் புழுக்கள் பறவைகளுக்கு இரையாகி வெயிலின் தாக்கத்தில் காய்ந்து அழிந்துவிடும். கோடை மழை பெய்யும் போது மழை நீர் தேங்குவதால் மண்ணுக்கு அடியில் காற்று புகுந்து ஈரப்பதம் இருக்கும். இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைப்பதால் குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் கிடைக்கும்.

எள் சாகுபடிக்கு ஏக்கருக்கு 2 கிலோ விதையே போதுமானது. அதேபோன்று நிலக்கடலை நீர் ஆதாரமுள்ள மேட்டுப்பாங்கான இடங்களில் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். பயிர் சாகுபடிக்கு தேவையான உளுந்து வம்பன் 8 சான்று விதைகள் மற்றும் உயிர் உரங்கள் தற்போது மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளதால் விவசாயிகள் கிராம விதை திட்டத்தின் கீழ் கிலோவிற்கு 48 ரூபாய் மானியத்தில் பயன் பெறலாம். மானியம் இல்லா இடுபொருள்கள், நுண்ணூட்டக் கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனோஸ் டிரைகோ, டெர்மாவிரிடி ஆகிய இடுபொருட்களையும் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்று பயன் அடையலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story