பந்தல் காய்கறிகள் சாகுபடி பணி

பந்தல் காய்கறிகள் சாகுபடி பணி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் பந்தல் காய்கறிகள் சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் பந்தல் காய்கறிகள் சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் பந்தல் காய்கறிகள் சாகுபடி பணி தீவிரமாக நடக்கிறது. பந்தல் காய்கறி சாகுபடி திருமருகல் ஒன்றிய பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 100 ஏக்கருக்கு மேல் காய்கறி மற்றும் பந்தல் காய்கறிகள் சாகுபடி பணிகள் நடக்கிறது.புடலை,சுரக்காய்,பீர்க்கன், பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்தாண்டு மழைக்காலத்தில் போதிய அளவு பருவமழை பெய்ததால், விவசாயிகள் பந்தல் சாகுபடி செய்தனர்.ஜூன் மாதம் இறுதி முதல் ஜூலை மாதம் துவக்கம் வரையில் பந்தல் காய்கறிகள் நடவு செய்து அக்டோபர் இறுதியில் அறுவடை செய்தனர்.அதன்பின் மீண்டும் நிலத்தில் உழவு மேற்கொண்டு கொத்தமங்கலம், பனங்காட்டூர், ஆலத்தூர், துண்டம் பாலூர், அனந்தநல்லூர், அகரக் கொந்தகை, பொறக்குடி பகுதிகளில் நிலத்தை தயார்படுத்தினர்.ஆழ்குழாய் கிணற்றில் இருக்கும் நீரை பயன்படுத்தி, நவம்பர் துவக்கத்தில் மீண்டும் பந்தல் காய்கறிகளின் விதைகள் நடவு செய்தனர்.தற்போது பந்தல் காய்கறிகள் அறுவடை பருவத்தை அடைந்ததால், ஒன்றியப்பகுதி முழுவதிலும் பந்தல் காய்கறிகள் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- திருமருகல் சுற்றுப்பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சில இடங்களில் மட்டுமே அறுவடை பணி நடக்கிறது.பந்தல் காய்கறிகளின் தேவை குறைந்து, விலை சரிந்து உள்ளது.தற்போது அதிகப்படியான பந்தல் காய்கறிகள் உற்பத்தியாகும் நிலையில், தேவை குறைந்துள்ளதால் புடலை, பீர்க்கன் மற்றும் பாகற்காய் விலை உயராமல் உள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு பருவத்தில் பந்தல் காய்கறி சாகுபடியில், நஷ்டம் ஏற்படவில்லை.ஆனால் லாபம் மிகக்குறைவுதான்.அடுத்த முறை சாகுபடியிலாவது விலை உயர்ந்தால் மட்டுமே பந்தல் காய்கறி சாகுபடி செய்வோர் வாழ்வாதாரம் காக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Tags

Next Story