கந்தர்வகோட்டை : கோடைகால பயிர் சாகுபடி ஆய்வு

கந்தர்வகோட்டை : கோடைகால பயிர் சாகுபடி ஆய்வு

வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு 

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்துறை மூலம் கோடைகால பயிர் சாகுபடிகளை வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வெள்ளாளவிடுதி மற்றும் மருங்கூரணி ஆகிய கிராமங்களில் கோடைகால பயிர்களான நிலக்கடலை, எள் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளின் வயல்களை வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) செல்வி ஆய்வு செய்தார். தற்போது நிலவிவரு நீர் பற்றாக்குறையினைஈடுசெய்ய குறைந்த நீர் தேவையுடைய பயிர்களான நிலக்கடலை, எள் மற்றும் உளுந்து சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் என விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்தார். ஆய்வின்போது வேளாண்மை அலுவலர் விக்னேஷ் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் வெற்றிசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வு ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கமலி செய்திருந்தார்.

Tags

Next Story