விம்ஸ் மருத்துவமனையில் கலாசார கலை விழா
விம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற கலாசார கலை விழாவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற கலாசார கலை விழாவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மாணவ பேரவை, நுண்கலை அமைப்பு சார்பில் ஆண்டு விழா மற்றும் கலாசார கலை விழா ஆகியவை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பு துணைவேந்தர் சபரிநாதன் தலைமை தாங்கி பேசினார். டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு இயக்குனர் ஞானசேகர் மற்றும் மாணவ நல இயக்குனர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதனிடையே கலாசார விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் பாலா, தொலைக்காட்சி கலைஞர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களுக்கு பல்வேறு கலை போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. மேலும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நுண்கலை அமைப்பின் உறுப்பினர்கள், மாணவ பேரவை உறுப்பினர்கள், துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story