கறி கடைக்காரர் கொலை வழக்கு - நான்கு பேரை கைது
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது எரிச்ச நத்தம் அங்குள்ள கிருஷ்ணமா நாயக்கர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர பிரசாந்த் வயது 28 இவர் திருமணமானவர் இவரது மனைவி மகாலட்சுமி வயது 22 கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன இவர்களுக்கு மகன் ஒருவரும் இருக்கிறார் இவர் எரிச்சநத்தம் பகுதியில் பன்றி இறைச்சி கடை போட்டு தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் விளக்கு பகுதியிலும் ஆடு கறிக்கடை போட்டு தொழில் செய்துள்ளார் இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள குன்னூர் விளக்கு அருகே கறிக்கடை போடுவதற்காக உறவினர் வீட்டிற்கு வந்த இவர் அதிகாலை அளவில் அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார் இந்த கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட பிரசாந்த் தந்தை சங்கிலி பாண்டி என்பர் கொடுத்த புகார் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் வழக்கு பதிவு செய்தார் மேலும் கொலையாளிகளை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் தலைமையில் ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் வயது 28,ஸ்ரீவில்லிபுத்தூர் ஓடைத் தெருவை சேர்ந்த கண்ணன் வயது 35,கிருஷ்ணன் கோவில் வளையப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் வயது 27,ஸ்ரீவில்லிபுத்தூர் கல்லணை ஓடை தெருவை சேர்ந்த சதிஷ்குமார் வயது 21 ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட பிரசாத் என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் நண்பர் வீட்டு விசேஷங்களை முன் நின்று நடத்துவதற்க்காக மனைவியின் உறவினர்கள் மற்றும் தெருவில் வசிப்பவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்ததாகவும் இதனால் பிரசாந்தின் மனைவியின் உறவினர்களுக்கு கௌரவ குறைச்சல் ஏற்பட்டதாகவும் பிரசாந்தை துடிதுடிக்க வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.