முறையாக சின்ஜி எரிவாயுவை மாற்றிதரவில்லை எனக்கூறி வாடிக்கையாளர் தர்ணா

முறையாக சின்ஜி எரிவாயுவை  மாற்றிதரவில்லை எனக்கூறி வாடிக்கையாளர் தர்ணா

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

ஈரோட்டில் முறையாக சின்ஜி எரிவாயுவை மாற்றிதரவில்லை எனக்கூறி வாடிக்கையாளர் நிறுவனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்.,தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் தனது பெட்ரோல் காருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலைதளங்கள் மூலம் ஈரோட்டில் பிரபலமாக அறியப்பட்ட தனியார் சிஎன்ஜி எரிவாயு பொருத்தும் நிறுவனத்தில் 50ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து காருக்கு மாற்று எரிபொருள் பொருத்தி உள்ளார்.

இதையடுத்து எரிவாயு பொருத்தப்பட்ட கார் பயணத்தின் அவ்வபோது பழுது ஏற்பட்டு வந்துள்ளது.இது குறித்து வாடிக்கையாளர் கார்த்தி நிறுவனத்தில் புகார் தெரிவித்தும் பழுது சரி செய்தும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சிஎன்ஜி எரிவாயு முறையாக பழுது நீக்கி கொடுக்குமாறு வாடிக்கையாளர் நிறுவனத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது எரிவாயு பழுது ஏற்படும் போது பயணத்தின் போது விபத்து சம்பவம் நிகழ்ந்ததாகவும் கடந்த சில மாதங்களாக பிரச்சினை சொல்லி வந்த போதும் தீர்வு கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

இதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாடிக்கையாளரிடம் பேச்சுவார்த்தை போது வாகனத்தின் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தினார்.

Tags

Next Story