கிராமத்துக்குச் செல்லும் பாதை துண்டிப்பு
சாலை துண்டிப்பு
கனமழையால் கொடகனாற்றில் நீா் வரத்து அதிகரித்ததால் விட்டல்நாயக்கன்பட்டியிலிருந்து ஆத்துப்பட்டிக்குச் செல்லும் மண் பாதை துண்டிக்கப்பட்டது. ஆத்துப்பட்டி பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமைபலத்த மழை பெய்தது. குறிப்பாக திண்டுக்கல் பகுதியில் 9 செ.மீ. மழை பதிவானது. இதன் காரணமாக கொடகனாற்றில் நீா் வரத்து அதிகரித்தது. மேலும், சந்தானவா்த்தினி ஆறு, வரட்டாறு ஆகிய ஆறுகளிலும் நீா் வரத்து அதிகரித்தால், கனமழையால் கொடகனாற்றில் நீா் வரத்து அதிகரித்ததால் விட்டல்நாயக்கன்பட்டியிலிருந்து ஆத்துப்பட்டிக்குச் செல்லும் மண் பாதை துண்டிக்கப்பட்டது. ஆத்துப்பட்டி பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், ஆத்துப்பட்டிக்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story