தட்டார்மடம் இடையே சாலை போக்குவரத்து துண்டிப்பு

தட்டார்மடம் இடையே சாலை போக்குவரத்து துண்டிப்பு
X

போக்குவரத்து துண்டிப்பு

வைரவம்தருவை குளத்தில் நீர்வரத்து உயர்ந்துள்ளதால் மணிநகர் - தட்டார்மடம் இடையே சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் பகுதியில் வைரவம்தருவை குளம் பிரதான நீர் பிடிப்புகுளமாக உள்ளது. இந்த குளத்திற்கு சடையனேரி கால்வாய் மூலம், மழை காலங்களில் கருமேனி ஆற்று மூலம் தண்ணீர் வரத்து உள்ளது. இந்த குளத்தை நம்பி அதனை சுற்றியுள்ள விவசாயிகளும், குடிநீர் ஆதாரம் உயரும் என கிராம மக்களும் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக இந்த குளத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் சடையனேரி கால்வாய் மூலம் வந்த தண்ணீரின் மூலம் வைரவம் தருவை குளத்தில் அதிகளவு தண்ணீர் உள்ளது. குளத்தில் தண்ணீர் அதிகளவு வந்ததால் தட்டார்மடத்தில் இருந்து மணிநகர், சொக்கன்குடியிருப்பு. உடை பிறப்பு. செல்லும் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டுள்ளன. இதில் குளத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் சாலையை பயன்படுத்தும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் காந்திநகர் வழியாக சுற்றி சென்று வருகின்றனர். தண்ணீர் ஓரளவு வடிந்து சென்றபின்தான் இந்த சாலையை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதனால் அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் தேங்கும் பகுதியில் தரைமட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story