உசிலம்பட்டி அருகே வாளால் உடம்பில் வெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன்

உசிலம்பட்டி அருகே வாளால் உடம்பில் வெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன்

வினோத நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் 

வாளால் உடம்பில் வெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா உசிலம்பட்டி அருகே நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கோட்டப்பட்டி கிராமம்.இக் கிராமத்தில் செட்டியார் இன மக்கள் கொண்டாடும் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக திருவிழா தேதி குறித்த உடன் ஆண்கள் சிறுவர்கள் உட்பட பக்தர்கள் காப்பு கட்டி சுமார் 48 நாள் விரதம் இருப்பார்கள்.

குறிப்பிட்ட திருவிழா நாளன்று கோட்டைப்பட்டி அருகில் உள்ள கிராமமான உத்தபுரம் கிராமத்தில் அம்மனுக்கு கிணற்றிலிருந்து நீர் எடுத்து அம்மன் சக்தி இருக்கும் கரகம் செய்வார்கள். பின்னர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சக்தி கரகத்தை பூசாரி தலையில் வைத்து கையில் பிடிக்காமல் நடந்து செல்வார், அப்போது வரும் வழியில் சிறுவர்கள்,

ஆண்கள் உள்பட பக்தர்கள் சுமார் 3 அடி நீளம் உள்ள வாளால் தங்கள் உடம்பில் வெட்டிக் கொண்டு வருவார்கள் .இவ்வாறு செய்வதால் அம்மன் சக்தியை உலகிற்கு நிலை நாட்டவும் வாளால் வெட்டிக்கொண்டே வருவதாகவும், அம்மன் அருளால் உடம்பில் வாளால் வெட்டிய போதும் பக்தர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படுவதில்லை என விழா குழுவினர் தெரிவித்தனர். பின்னர் கரகம் கோவிலை வந்தடைந்தது,

Tags

Next Story